தமிழக அரசால் 24/10/2008 ஆம் தேதி திருப்பூர், மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் தலைமயில் திருப்பூர் மாவட்டதுக்கான கபாடி கழகம் உருவாக்கப்பட்டு அதன் தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கயம்,ஊத்துக்குளி, வெள்ளகோவில், குன்னத்தூர், அவிநாசி, பல்லடம், பொங்கலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கபாடி அணிகளை வைத்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து மாநில, தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கபடுகின்றனர் .
ஆண்டுதோறும் திருப்பூர் மாவட்ட கபாடி கழகத்தின் சார்பாக நடத்தப்படும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து 120 அணிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 300 பேர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேசிய கபாடி அணி தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.